திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (12:13 IST)

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2023 - துலாம்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)


கிரகநிலை:
ராசியில்  சுக்ரன் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் புதன் -  சுக  ஸ்தானத்தில் சனி -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் ராஹூ  - களத்திர  ஸ்தானத்தில் குரு (வ) -  அயன சயன போக  ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:
02-12-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-12-2023 அன்று சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-12-2023 அன்று சனி பகவான்பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-12-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-12-2023 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
வாழ்க்கை துணையின் ஆதரவை பெறும் துலாராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை  மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க   வழிசெய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.

குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவப் பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள்.

பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும்.

கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவ செலவுகள் குறையும். அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார்-உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும்.

சுவாதி:
இந்த மாதம் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழி பட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19