திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By

கடகம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்): யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும் கொண்ட கடக ராசி நேயர்களே! இந்த மாதம் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். 

அசையா சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். பணவரவுகளும் சுமாராகவே இருக்கும்.
 
குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படுத்தும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். உற்றார்- உறவினர்களின் வருகையால் சில மனசஞ்சலங்கள் உண்டாகும்.
 
தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கையிலிருக்கும் ஆர்டர்களைக்கூட முடித்துக்கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அரசுவழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல், டென்ஷனைக் குறைத்துக்கொள்ள முடியும்.
 
உத்தியோகஸ்தர்கள் தங்கள் உழைப்பிற்கான முழுப்பலனை அடையமுடியும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் சில நேரங்களில் அதிகநேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தைவிட்டும் பிரியநேரிடும்.
 
பெண்களுக்கு கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். அசையா சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண்செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
 
அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.
 
கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும். அடிக்கடி ஞாபகமறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. தேவையற்ற பொழுதுபோக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் - 4: இந்த மாதம் சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பரிகள் மற்றும் அருகிலிருப்பவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும்.
 
பூசம்: இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள்.  மன நிம்மதி கிடைக்கும்.
 
ஆயில்யம்: இந்த மாதம் உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.
 
பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.
 
அதிர்ஷ்ட தினங்கள்: Nov 9, 10
 
சந்திராஷ்டம தினங்கள்: Oct 20, 21; Nov 16.