புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (11:55 IST)

கடகம் - மார்கழி மாத பலன்கள்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - கிரகநிலை: ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ,புண்ணிய  ஸ்தானத்தில் குரு, புதன்  - ரண, ருண ரோக, சத்ரு ஸ்தானத்தில் சூர்யன், சனி - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
 
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பக்குவமாக காரியங்களை சாதிக்கும் கடகராசியினரே இந்த மாதம் எல்லா முயற்சிகளும், காரியங்களும்  சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில்  இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தைக்கு  உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும்.

நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை  நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன்  மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து  சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்தல் நலம்.  முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு  முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.
 
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடிவடையும். அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். உங்கள் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிப்பீர்கள். உழைப்புக்கேற்ற வருமானத்தைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் பாராட்டுகளும் அங்கீகாரமும்  கிடைக்கும். பயணங்களாலும் நன்மை அடைவீர்கள். 
 
வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி  செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல  லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். 
 
அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். புதிய  பொறுப்புகளைப் பெறுவீர்கள். கட்சி மேலிடத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு ஏற்படும். தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.  எதிர்கட்சியினரை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். 
 
கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு  மழையில் நனைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். அதேநேரம் எவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். 
 
பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். வருமானம் திருப்தியாக இருப்பதால் ஆடை,  ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வீர்கள். 
 
மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உங்கள் தேவைகளைப் பெற்றோர் பூர்த்தி செய்வார்கள். நண்பர்களின் ஆதரவைப்  பெறுவீர்கள். அதனால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.
 
புனர்பூசம் 4ம் பாதம்:
 
இந்த மாதம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது நல்லது.  எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.  எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.
 
பூசம்:
 
இந்த மாதம் பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை  திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில்  குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின்  செயல்களால் பெருமை அடைவீர்கள்.
 
ஆயில்யம்:
 
இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல  தகவலாக வரும்.  விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது  கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித்  தலைமையின் ஆதரவு கிட்டும். 
 
பரிகாரம்: திங்கள்தோறும் சிவனையும் அம்பாளையும் வணங்குங்கள். மல்லிகையை அம்மனுக்குப் படைக்கவும். மனம் போல் வாழ்க்கை  இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
சந்திராஷ்டம தினம்: ஜனவரி 10, 11 
அதிர்ஷ்ட தினம்: டிசம்பர் 31; ஜனவரி 2, 3, 4.