ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (18:00 IST)

ஏப்ரல் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ராசியில்  சந்திரன், ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்   கேது, சனி - அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) - பாக்கிய ஸ்தானத்தில்  புதன் -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
பலன்:
சாமர்த்திய பேச்சுகளைப் பேசி காரியத்தில் கண்ணாயிருக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக  இருக்கும்.  எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய  வேண்டி இருக்கும்.  எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
 
குடும்பத்தில் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும். 
 
தொழிலதிபர்கள் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் ஆதாயம் பெற்று முன்னேற்றம் அடைவார்கள். பணப்புழக்கம் தங்கு தடையின்றி இருக்கும். நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். 
 
உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.  நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்வீர்கள். 
 
பெண்கள் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள்  புத்திரதோஷம் அமைப்பிற்குள் வருவதால் உரிய முறையில் பரிகாரம் செய்வது சிறந்தது.
 
கலைத்துறையினர் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். 
 
அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். 
 
மாணவர்கள் படிப்பை விட்டு கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் படிப்பில் இடையூறு வரலாம். கெட்டவர்களின் சகவாசத்தை முற்றிலுமாக விட்டொழிக்கவும். படிப்பில் சிறந்த நிலையை அடைய இந்த காலகட்டத்தை பயன்படுத்தவும்.
 
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்  நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.  
 
திருவாதிரை:
இந்த மாதம் திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்கபெறுவார்கள். 
 
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எதிலும் தாமதமான போக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.  பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.
 
பரிகாரம்: முடிந்தவரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10