ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (17:55 IST)

ஏப்ரல் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

 
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில்  கேது, சனி -  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா) - லாப ஸ்தானத்தில்  புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  
 
பலன்:
உணர்ச்சி மிக்க பேச்சுகளைப் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் தடையை ஏற்படாதிருக்க திட்டமிடல் அவசியமாகிறது.  இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
 
குடும்பத்தில் கடந்த காலங்களில் இருந்த வீண் செலவுகள் குறைந்து சுபகாரிய செலவுகள் நிகழும். உங்கள் பேச்சும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள்.  வீடு மனை வாகனம் ஆகியவற்றில் ஏற்படும் பராமரிப்பு செலவுகளை மனமுவந்து செய்வீர்கள். 
 
தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கமான நிலை அடைவார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேறுவர். பொருளாதார வரவுகள் சமச்சீராக இருக்கும். நற்செயலுக்கேற்ப புகழ் கிடைக்கும். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். 
 
பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். குழந்தைகளின் கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். 

 
கலைத்துறையினருக்கு ஒப்பனையாளார்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாடல் சம்பந்தப்பட்டவர்கள், நடனக் கலைஞர்கள் போன்ற துறைகளில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். 
 
அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும்.  பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. 
 
மாணவர்கள் தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும். 
 
அஸ்வினி:
இந்த மாதம் தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம்.  தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. 
 
பரணி:
இந்த மாதம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாக பேசுவது நல்லது. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். 
 
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 
 
பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6