திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (10:48 IST)

ஐப்பசி மாத ராசி பலன்கள் 2023 – கும்பம்

கும்பம்  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)


கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ)  என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
01-11-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
02-112023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தன்னலம் கருதாமல் பிறர் நலத்தை மனதில் கொண்டு செயல்படும் கும்ப ராசியினரே நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்லக் கூடியவர். இந்த மாதம் அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை.

பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும்.  அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும்.

பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல் பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும்.

சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த  பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்  மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில்  நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். 

பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:
இந்த மாதம் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது. 

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: நவ 9, 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: நவ 2, 3