சனி, 14 செப்டம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு பேச்சில் கவனம் தேவை!– இன்றைய ராசி பலன்கள்(05.09.2024)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 


மேஷம்:
இன்று அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ரிஷபம்:
இன்று உதவி கிடைக்கும். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைப்பார்கள். புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்களை கற்றுத் தெளிவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மிதுனம்:
இன்று கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும்.  எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

 
கடகம்:
இன்று வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

 
சிம்மம்:
இன்று தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கன்னி:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

 
துலாம்:
இன்று குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

 
விருச்சிகம்:
இன்று கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.   
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு:
இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

 
மகரம்:
இன்று கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:
இன்று பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்:
இன்று தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5