1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஜூலை 2023 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு வீடு, நிலம் வாங்க நல்ல நாள்! இன்றைய ராசிபலன் (24-07-2023)!

daily astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்:
இன்று குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர். மாணவர்கள் படிப்பில் மந்தநிலை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

ரிஷபம்:
இன்று அரசியல்வாதிகளுக்கு  மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். சமூகப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

மிதுனம்:
இன்று வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக  நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது  நன்மை தரும்.  திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கடகம்:
இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். தொழிலில் திறமை அதிகரிக்கும். உபதொழிலில் ஆர்வம் உண்டாகும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்:
இன்று எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான  நிலை காணப்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன்  செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று  தாமதமாகலாம். மனதில் இருந்த  கவலையை போக்கி நிம்மதி  கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி:
இன்று அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

துலாம்:
இன்று வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர்.  புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்:
இன்று உடல் நிலை திருப்திகரமாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கணவன், மனைவி தங்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு:
இன்று தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:
இன்று பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்:
இன்று யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்:
இன்று தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7