திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (06:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (03-12-2022)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு  உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்:
இன்று வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மிதுனம்:
இன்று அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

கடகம்:
இன்று பணவரத்து அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்:
இன்று வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி:
இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9  

துலாம்:
இன்று குடும்பத்தார் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

விருச்சிகம்:
இன்று பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6 

தனுசு:
இன்று பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். வியாபாரத்தில் புது யுக்தியை கையாளுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்:
இன்று வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கும். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

கும்பம்:
இன்று உங்கள் தொழிலில் உங்களுக்கென தனி முத்திரையை பதிப்பீர்கள். சிலருக்கு வாக்கு கொடுக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்படும். மிக அருமையாக உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மீனம்:
இன்று பெரியோர்களின் ஆசி உண்டாகும். ஆடை, அணிகலன் புதிதாக வாங்குவீர்கள். சிலரின் பொறாமைக்கு ஆளாவீர்கள். உன்னத நிலைக்கு செல்ல வேண்டி மனம் ஏங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3