புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 மே 2022 (06:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (11-05-2022)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும்.  ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்:
இன்று எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த  காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமை யாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மிதுனம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்:
இன்று உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின்  ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

சிம்மம்:
இன்று வீண்அலைச்சல் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கன்னி:
இன்று காரிய தடைகள் எதிலும் தாமதமான  போக்கு காணப்படும்.  மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள்  மனதுக்கு  சந்தோஷத்தை தருவதாக இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

துலாம்:
இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.  கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்று தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்:
இன்று எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

தனுசு:
இன்று கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.  எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

மகரம்:
இன்று மாணவர்கள் உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சல், காரிய தாமதம், டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்:
இன்று செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

மீனம்:
இன்று ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9