வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (03-09-2019)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்      
இன்று வருமானம் நல்லபடி இருந்தும் வீண் செலவுகள் ஏற்படுவதால் மனம் கவலையில் இருக்கும்.  குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் எடுக்க சற்று கஷ்டப்பட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.  அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
ரிஷபம்      
இன்று புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கைக்கு வர வேண்டிய பாக்கிகள் இப்போது வசூலாகும்.  வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.  பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
மிதுனம்     
இன்று  ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது.கண்ட நேரங்களில், கண்ட இடத்தில் உண்பதை தவிர்ப்பது நல்லது.  குடும்பச் சூழ்நிலை மனதிற்கு நிம்மதி தரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும்.  எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை தடையின்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

 
கடகம்
இன்று எழுதும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். இது நாள் வரை சரியான வேலை கிடைக்க வில்லையே என வருந்தி வந்தவர்களுக்கு அந்நிலை மாறி நல்ல வேலை கிடைக்கும். சிலர் ஒத்துழைப்பு நல்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
சிம்மம்      
இன்று குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.  பொறுமையை கடைபிடியுங்கள். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். நல்லபடியாக அனைத்து விஷயங்களையும் முடித்துக் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக  செய்து முடிப்பார்கள். அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6
கன்னி
இன்று அதிர்ஷ்டமான நாள். திட்டமிட்டபடி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சிலர் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தைப் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும்.  குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்
இன்று முக்கிய முடிவுகளில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இரண்டு நாட்கள் முடிவுகளை தள்ளிப் போடுங்கள். அலைச்சல் அதிகம் இருப்பினும் தக்க சமயத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள் அல்சர் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கலாம். எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால்  காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில்  வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  திடீர் கருத்து  வேற்றுமை ஏற்படலாம். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
விருச்சிகம்  
இன்று சிலருக்கு எதிர்பார்த்திருந்த வேலை இடமாற்றம் பற்றி நற்செய்திகள் வரலாம். அது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மையாகவே அமையும். உடன்பணிபுரிபவர்கள் உங்கள் மீது பொறாமை பட நேரலாம். கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
தனுசு
இன்று சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவது பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். நல்லதொரு நற்பணிகளில் ஈடுபடுவீர்கள்.  உடன்பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக  முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள்  கைகூடும்.  கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
மகரம்
இன்று அலுவலக விசயத்தில் கவனம் தேவை. உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம்.  காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து  உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
கும்பம்
இன்று சிறு தொழில், வாணிபம் செய்பவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். முடிவுகள் எடுக்கும் போது பெரியோர் அறிவுரை கேட்டு நடப்பது அவசியமாகிறது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மீனம்
இன்று குடும்பத்திற்குத் தேவையான பொருள் ஒன்றை வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படக்கூடும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைப் பணம் வரவேணிடி இருந்தால் இப்போது கைக்கு வரும். பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள்  அனுகூலமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9