விஜயபாஸ்கர்- செந்தில் பாலாஜி மோதல் : எடப்பாடி அரசுக்கு சிக்கல் (வீடியோ)


Murugan| Last Updated: திங்கள், 29 மே 2017 (17:59 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அரசு நிகழ்ச்சியில் விமர்சித்த தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 

 
இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு அரசியல் கட்சியா? என்று எல்லா மக்களிடமும், பெயர் வாங்கிய கட்சி என்பதில் அ.தி.மு.க கட்சி முக்கியத்துவம் வாய்ந்த நிலையில், அதன் முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின்னர் ஒ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க, சசிகலா அ.தி.மு.க, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வின் அ.தி.மு.க என்று கிளை, கிளையாக பிரிந்தது. 
 
ஆனால் தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகளின் கடும் விமர்சினத்தினால் அந்த கட்சியானது மிகுந்த சாடலுக்கு உண்டாகி, தற்போது சசிகலா சிறை சென்ற பின்னர் டி.டி.வி தினகரனிடமிருந்த அ.தி.மு.க, அந்த டி.டி.வி தினகரனும் சிறைக்கு சென்ற பிறகு,  எடப்பாடி பழனிச்சாமியும், தம்பித்துரையும் காத்து வருவதாக கூறப்படுகின்றது. 
 
தற்போது இரு கட்சிகளை இணைக்கும் பணிக்காகவும், பேச்சுவார்த்தைக்காகவும் பெரும் முயற்சிகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் உள்ளிட்ட சுமார் 30 எம்.எல்.ஏ க்கள் ரகசிய கூட்டம் நடத்தினர். அதை கேள்விபட்ட  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மலர்கண்காட்சிக்கு செல்லும் முன்னர் கொஞ்சம் பொறுங்கள் என்று கூறி சென்றார். அதன் பின் ஊட்டியிலிருந்து வந்த பின்பு, எடப்பாடி பழனிச்சாமி, போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ க்களையும், முன்னாள் அமைச்சர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 


 

 
அப்போது முன்னாள் அமைச்சரும், தற்போதைய அரவக்குறிச்சி எம்.எம்.ஏ வுமான செந்தில் பாலாஜி, கொண்டு வந்த மருத்துவக்கல்லூரி திட்டத்தை அம்மா (ஜெயலலிதா) அறிவித்து, அவரே அடிக்கல் நாட்டு விழா நடத்திய நிலையில் தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அரசியல் கால்புணர்ச்சி காரணமாக வேறுபக்கம் கொண்டு செல்ல பார்க்கின்றார் என புகார் கூறியதோடு,  மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை மட்டுமே தாக்கி கூறியுள்ளதாக கூறப்படுகின்றது. 
 
எனவே, இரு தரப்பினரும் நான் (எடப்பாடி பழனிச்சாமி) பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறி சமாதானப்பேச்சுவார்த்தை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வருவாய்த்துறையின் சார்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் (பொ) சூர்ய பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரையும், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று 736 நபர்களுக்கு ரூ.2 கோடியே 54 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.  அப்போது பேசிய அமைச்சர் இந்த கரூர் மாவட்டத்தில், கரூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏக்களிடம் பலமுறை இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர் நிறைவேற்ற வில்லை என்று கூறியதோடு, நான் வாக்குகள் சேகரிக்கும் போது இந்த கோரிக்கையை அறிந்து தற்போது நிறைவேற்றுகின்றேன் என்றார். 
 
மீண்டும் மீண்டும் முன்னாள் எம்.எல்.ஏ எதுவும் செய்யவில்லை என்றும் கூறியதோடு, கடந்த 2006-2011, 2011-2016 ஆகிய இரு சட்டமன்ற தேர்தல் காலத்திலும் மொத்தம் 10 ஆண்டுகளாக கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருந்தவர் செந்தில் பாலாஜி, தற்போது தான் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வாக இருந்து வருகின்றார். ஆக, பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் முன்னிலையிலேயே எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை இவர் தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை என்று, அதுவும் அ.தி.மு.க கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை முன்னிலையிலேயே கூறியது, எடப்பாடி பழனிச்சாமியின் அரசிற்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் அவருடைய அந்த 10 ஆண்டுகாலத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்ததோடு, தெரு, தெருவாகவும், ஊர், ஊராகவும் குறைதீர்ப்பதற்காக தனியார் பேருந்துகள் மற்றும் மினிபேருந்துகளில் சென்று குறைகளை தீர்த்து வந்ததாகவும், இது அரசியல் கால்புணர்ச்சியை காட்டி மீண்டும் செந்தில் பாலாஜியை வேண்டுமென்றே தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வம்புக்கு இழுப்பதாகவும், அதை தம்பித்துரை முன்னிலையிலேயே அவர் நாடகத்தை தொடக்கி உள்ளதாகவும், இந்த செயலை உடனே எடப்பாடி பழனிச்சாமி கண்டிக்க வேண்டுமென்றும், இல்லாத பட்சத்தில் செந்தில் பாலாஜியின் தரப்பு எம்.எம்.ஏக்கள் விரைவில் மீண்டும் ஒ.பி.எஸ் அணிக்கோ, வேறு அணிக்க மாற வாய்ப்பு உள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பினரும், நடுநிலையாளரும் தெரிவித்துள்ளனர்.

- கரூரிலிருந்து நமது சிறப்பு நிருபர்

 


இதில் மேலும் படிக்கவும் :