1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2017 (06:30 IST)

தினகரனுக்கு ஆதரவாக தொப்பி அணிந்து பிரச்சாரம் தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைத்துள்ளதால் அந்த தொப்பியை அணிந்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.


 


நேற்று இரவு ஆர்.கே. நகர் தொகுதி மக்களிடையே பிரச்சாரம் செய்யும்போது அவர் பேசியதாவது: ‘‘இரட்டை இலை சின்னத்தை முடக்க யார் காரணம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பவே ஆர்.கே. நகரில் டி.டிவி. தினகரன் போட்டியிடுகிறார்’’ என்று கூறினார்.

சுமார் 120-க்கு மேற்பட்டோர் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்து பிரச்சாரம் தொடங்கியுள்ளதால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.