1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (22:03 IST)

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.



 
 
கமல் குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியபோது, ' 'அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு பொருளாதாராத்தில் ஏபிசிடி கூட தெரியாது என்றும், 'பாட்டு பாடி ஆட்டம் போடும் கமல்ஹாசன் எப்படி நாட்டை ஆள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்
 
அதேபோல் ரஜினியை அவர் குறிப்பிடும்போது, 'ரஜினி ஒரு மோசடிப்பேர்வழி என்றும் அவர் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் கூறினார். வழக்கம்போல் சுவாமியின் கருத்துக்கு ரஜினி, கமல் ரசிகர்கள் டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.