திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 19 மார்ச் 2017 (12:17 IST)

எடப்பாடி அணியில் இருந்து விலகிவிடுவேன்: சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.கனகராஜ் மிரட்டல்!!

சூலூர் வெடி விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து வெளியேறி விடுவேன் என்று அ.தி.மு.க-வின் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் கூறியுள்ளார். 


 
 
கோவை சூலூர் தாலுகா பெரியகுயிலி எனும் ஊரில் நடந்த கல் குவாரி வெடி விபத்து சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்ட அந்த கல் குவாரியை சூலூர் எம்.எல்.ஏ.கனகராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர், இது ஒரு விபத்தே இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காததால் தான் அவர்கள் உயிரிழந்தனர். ஆனால், லஞ்சம் பெற்றுக் கொண்டு போலீசார், இதை விபத்து வழக்காக பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், இது தொடர்பாக நான் சட்டசபையில் குரல் கொடுப்பேன். அந்த கல் குவாரியில் விபத்து நடக்க காரணமானவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு சென்று விடுவேன் என தெரிவித்துள்ளார்.