1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2016 (01:45 IST)

’சுப்பிரமணிய சாமிக்கு நேர்ந்ததுதான் சசிகலா புஷ்பாவுக்கும்’ - ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஜெயலலிதாவை விமர்சித்ததால் சுப்பிரமணியசாமிக்கு அநாகரீகமா வரவேற்பெல்லாம் கொடுத்தார்கள். அதுபோலத்தான் எம்பி சசிகலா புஷ்பாவை அடித்த விவகாரமும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
 

 
ஈரோடு மாவட்டம் ஓடாநிலை கிராமத்தில் தீரன் சின்னமலையின் 211ஆவது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீரன் சின்னமலை சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன்,  ‘’தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாவது ஆறாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது மூன்றாவது கட்சியாக வளர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்த இயக்கமாக தொடர்ந்து உருவாகி வருகிறது.
 
தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் ஜெயலலிதா அந்த கட்சியை சேர்ந்த பெண் எம்பியான சசிகலா புஷ்பாவை அடித்தார் என்று அந்த பெண் எம்பியே பாராளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார். உயிருக்கு பாதுகாப்பும் கேட்டுள்ளார். அதிமுகவின் இத்தகைய அராஜக போக்கு தொடர்ந்து வருகிறது.
 
சுப்பிரமணிய சாமியை ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்து கூறினார் என்று ஜெயலலிதாவால் தூண்டிவிடப்பட்ட அதிமுகவினர், நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமிக்கு அநாகரீகமா வரவேற்பெல்லாம் கொடுத்தார்கள். அதுபோலத்தான் எம்பி சசிகலா புஷ்பாவை அடித்த விவகாரமும். அதிமுக ஒரு வன்முறை இயக்கம்’’ என்றார்.