திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (09:59 IST)

அம்மாவின் அம்மாவை மிஞ்சியவர் சின்னம்மா: அமைச்சர்கள் விளக்கம்

திருச்சியில் அதிமுக நிர்வாகிகள், அம்மாவின் அம்மா சந்தியாவை விட அம்மாவுடன் அதிகம் இருந்தவர் சின்னம்மா தான். அதனால் அவருக்கே கட்சித் தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி உள்ளது எனறு கூறியுள்ளனர்.


 

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். சசிகலா பொதுச் செயலாளர் பதிவை ஏற்க அனைத்தும் தகுதிகள் உள்ளது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் பல்வேறு வித செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
 
திருச்சியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்று உரையாடினர். மேலும் கூட்டத்தில் அவர் ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து கூறியதாவது:-
 
1982-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை மறைந்த அம்மாவுக்கு எல்லாமே நம் சின்னம்மா தான். அம்மாவின் அம்மா சந்தியாவை விட அம்மாவுடன் அதிகம் இருந்தவர் சின்னம்மா தான். அம்மா கட்டிக்காத்த இந்த இயக்கத்தை அற்புதமாக வழிநடத்தும் வல்லமை உடையவர் சின்னம்மா மட்டுமே, என்றனர்.