புதன், 24 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (15:42 IST)

முதலமைச்சராக சசிகலாவை பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்

முதலமைச்சராக சசிகலாவை பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 7ஆம் தேதி சசிகலா முதலமைசாராக பதவியேற்க உள்ளார்.


 

 
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிடம் கொடுத்தார். பின்னர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை முதலமைச்சராக முன்மொழிந்தார். வரும் 7ஆம் தேதி சசிகலா முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.