தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை எங்களால் மட்டுமே நிரப்ப முடியும்: தமிழிசை சௌந்தரராஜன்
ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜகவால் மட்டுமே நிரப்ப முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஞன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
முன்னாள் தமிழக செயலாளர் ராம் மோகன ராவ் வீட்டில் சோதனை செய்ததில் கிடைத்தவை, தமிழகத்தில் ஊழல் பயங்கரமாக நடைப்பெற்றுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகள் தன்னிச்சையான செயல்பாடு.
வருமான வரித்துறை மூலம் மத்திய அரசு மிரட்டுகிறது என்று பரப்படும் செய்திகள் முற்றிலும் தவறான கருத்து. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு எதிராக பேசுவது, ஊழலையும், கருப்பு பணத்தை ஆதரிப்பது போன்ற செயலாக உள்ளது.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா போன்ற மிகப்பெரும் அரசியல் கட்சித்தலைவரின் மறைவுக்குப் பின் மாபெரும் வெற்றிடம் தமிழகத்தில் உருவாகியுள்ளது. அதை பாஜகவால் மட்டுமே நிரப்ப முடியும், என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே பாஜக, அதிமுக மற்றும் தமிழகத்தை கைப்பற்ற நினைக்கிறது என்ற செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பின் மத்திய அரசு தமிழகத்துக்கு அதரவு அளிக்கு என்று தெரிவித்தது. அதற்கு காங்கிரஸ் சார்பில், பாஜக பின் வாசல் வழியாக தமிழகத்தில் நுழைய பார்க்கிறது என்று தெரிவித்தனர்.
அதற்கு தமிழிசை சௌந்தரராஜன், நாங்கள் ஏன் பின்வாசல் வழியாக வர வேண்டும். நாங்கள் முன்வாசல் வழியாகவே வருவோம் என்று கூறினார். இப்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் கூறியுள்ளார்.