1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 30 ஜூலை 2017 (10:40 IST)

அமித்ஷா தலைமையில் பாஜகவில் இணையும் ஓபிஎஸ்?

தமிழகத்தில் முகாமிடும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் ஓபிஎஸ் அணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
பாஜக தனது கட்சியை இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களில் நிலை நிறுத்தியுள்ளது. வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி வலுவாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் பாஜக ஆட்சி அமைக்க போராடி வருகிறது. அதிமுக கட்சிகளில் இரு பிரிவுகளும் பாஜக கட்டுபாட்டில்தான் உள்ளது. ஓபிஎஸ் அணியை பாஜகவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைப்பெற்றுவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
 
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் முகாமிடுகிறார். அப்போது தமிழக பாஜகவில் நிறைய மாற்றங்கள் அதிரடியாக நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
அமித்ஷாவின் இந்த பயணத்தின்போது ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் ஓபிஎஸ் அணியை பாஜகவில் இணைக்கும் பணி நடைப்பெறும் என்று கூறப்படுகிறது.