திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 22 ஜூன் 2017 (23:17 IST)

ஒரே நேரத்தில் டெல்லி பயணம் செய்த ஓபிஎஸ்-ஈபிஎஸ். என்ன நடக்குது அதிமுகவில்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது மத்திய அமைச்சர்களும் சரி, பிரதமரே இருந்தாலும் சரி, ஜெயலலிதாவை சந்திக்க அவருடைய வீட்டிற்கு வருவது தான் வழக்கம். ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது அபூர்வமாகத்தான் நடைபெறும்



 


ஆனால் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக தலைவர்கள் மாறி மாறி டெல்லிக்கு வலிய சென்று தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய மறுநாளே ஓபிஎஸ்-ம் அதே பல்லவியை பாடினார்.

இந்த நிலையில் இன்று முதல்வர் பழனிச்சாமி டெல்லிக்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவிக்கவுள்ள நிலையில் ஓபிஎஸ்-ம் டெல்லி செல்கிறார். ஒரே நாளில் இரு அணி தலைவர்களும் டெல்லிக்கு சென்று பிரதமர் உள்பட பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.