1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2017 (08:53 IST)

தமிழகத்தில் ஆட்சி கலைப்பா? தனித்தனியாக பிரதமரை சந்தித்த ஓபிஎஸ்-தினகரன் அணி

தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, அமைச்சர்கள் வீடுகளின் வருமானவரித்துறை சோதனை ஆகிய அசாதாரண சூழ்நிலை நிகழ்ந்து வருவதால் தமிழகத்தில் ஆட்சியை கலைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.



 


இந்த நிலையில் ஆட்சியை கலைக்கக்கூடாது என்பதற்காக தினகரன் அணியும்,கலைக்க வலியுறுத்தி ஓபிஎஸ் அணியும் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இதை உறுதி செய்வது போல் இன்று மாலை பிரதமர் மோடியை தினகரன் அணியை சேர்ந்தவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை சந்தித்தார். அவர் சந்தித்து முடித்த ஒருசில நிமிடங்களில் ஓபிஎஸ் அணி ஆதரவு எம்பி மைத்ரேயன், பிரதமர் மோடியை சந்தித்தார்.

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்வதற்காகவும் மற்றும் நட்புரீதியிலும் பிரதமர் மோடியை சந்தித்ததாக எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

இரு அணியை சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.