1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 மே 2017 (09:38 IST)

மோடியின் ரகசிய வாக்குறுதி: உற்சாகத்தில் ஓபிஎஸ் அண்ட் கோ!!

ஓபிஎஸ் பின்னணியில் மோடி செயல்படுகிறார் என பலர் பேசி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோடி- ஓபிஎஸ் சந்திப்பு மேலும் இதற்கு வலு சேர்த்துள்ளது.


 
 
அதிமுக கட்சி உடைந்து இரண்டாக செயல்பட்டு வருகிறது. இந்த மோதலால் அதிமுக பெயரும், இரட்டை இலை சின்னமும் மிஞ்சவில்லை. அதிமுகவை காப்பாற்ற இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்ன நிலை ஏற்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்குமா என்பது இன்று வரை புரியாத புதிராவே உள்ளது.
 
இந்நிலையில், மோடியை சந்தித்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி அரசு மீதான புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு பாஜவுக்கு முழு ஆதரவு தெரிவிக்க அதிமுக தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார் என தெரியவந்துள்ளது.
 
ஆனால், பாஜவுக்கு ஆதறவு அளிப்பதற்கு இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்று ஓபிஎஸ் மோடிக்கு விவரமாக எடுத்துரைத்தாக தெரிகிறது.
 
எனவே, இரு அணிகளையும் இணைப்பது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், அதற்கான ரகசிய வாக்குறுதியையும் மோடி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த ரகசியம் ஓபிஎஸ் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதனால், ஓபிஎஸ் உற்சாகத்தில் உள்ளார் என் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.