1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2016 (18:04 IST)

வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு : கரூரில் பரபரப்பு

வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு : கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி 18வது வார்டு கந்தசாமி பிள்ளை தெருவில் வசிக்கும் மக்கள், தன் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி  உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.


 

 
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி  18-வது வார்டு கந்தசாமிபிள்ளை தெருவில் சுமார் 40 குடியிருப்புகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் கந்தசாமி பிள்ளை தெருவில் நகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. 
 
அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தராததை கண்டித்து 18வது வார்டு கந்தசாமிபிள்ளை தெருவை சேர்ந்தப் பொதுமக்கள் நேற்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்