வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2016 (19:25 IST)

செல்போன் வைத்துள்ளீர்களா? எத்தனை முறை பேஸ்புக் பார்ப்பீர்கள்? : கருணாநிதி பதில்

செல்போன் வைத்துள்ளீர்களா? எத்தனை முறை பேஸ்புக் பார்ப்பீர்கள்? : கருணாநிதி பதில்

திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய பேஸ்புக்கத்தில், கேள்வி பதில் வடிவில் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். அவை பின்வருமாறு:


 

 
என்ன செல்போன் வைத்துள்ளீர்கள்?”
 
நான் எனக்கெனத் தனியாக செல்போன் வைத்துக்கொள்வது இல்லை. முக்கியமாகப் பேசவேண்டும் என்கிறபோது, உதவியாளர் நித்யாவே அவருடைய ‘செல்போனில்’ தொடர்புகொண்டு என்னிடம் கொடுத்துவிடுவார்.
 
ஃபேஸ்புக்கை ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்க்கிறீர்கள்?
 
பல்வேறு பணிகளைச் செய்வதற்கு ஏற்ப, என்னிடம் பல உதவியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சுரேஷ், நவீன் ஆகியோர், ஃபேஸ்புக்கில் என் சம்பந்தமான செய்திகளோ, அல்லது நான் அனுப்பும் அறிக்கைகளோ இடம்பெறும் நேரத்தில், அவர்களே அதை என்னிடம் காண்பிப்பார்கள். இதற்கு, கணக்கு இல்லை.
 
இப்போதும் யோகா பயிற்சி செய்கிறீர்களா?
 
மூச்சுப்பயிற்சி போன்ற பயிற்சிகளை மட்டும் செய்கிறேன்.
 
உங்களுக்குப் பிடித்த பண்டிகை எது?
 
ஆண்டுதோறும் வேளாண் பெருமக்கள் மன மகிழ்ச்சியோடு கொண்டாடும் ‘தமிழர் திருநாள்’ எனப்படும் பொங்கல் பண்டிகை.
 
இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.