திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (14:54 IST)

கருணாநிதி வீட்டுக்கு கங்கை நீரை பார்சல் அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்

திமுக தலைவர் கருணாநிதி கங்கை நீர் விமர்சனம் செய்யப்படுவதை விமர்சனம் செய்திருந்தார். அதனால் இந்து மக்கள் கட்சியினர் கங்கை நீர் பார்சலை அவரது வீட்டுக்கு அனுப்பி போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.


 

 
தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனை அமோகமாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இதனை திமுக தலைவர் கருணாநிதி அண்மையில் விமர்சித்து இருந்தார். 
 
இதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலைய தலைமை அலுவலத்தில் இருந்து இந்து மக்கள் கட்சியினர், கங்கை நீர் பார்சலை அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
மேலும் கருணாநிதிக்கு எதிராக அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.