நான் யாருக்கும் பயப்படமாட்டேன் : தோல்விக்கு பின் முகம் காட்டிய விஜயகாந்த் (வீடியோ)


Murugan| Last Modified வியாழன், 9 ஜூன் 2016 (14:29 IST)
தான் யாருக்கும் பயப்படவில்லை என்றும், பீனிக்ஸ் பறவை போல் தேமுதிக மீண்டும் எழுந்து வரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.

 

 
மக்கள் நலக் கூட்டனியுடன் கை கோர்த்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், அவர் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார். மேலும் அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். அது தேமுதிகவிற்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. வாக்கு சதவீதம் அதாள பாதாளத்திற்கு சென்றதால் முரசு சின்னமும் கைவிட்டுப் போனது.
 
இதுநாள் வரை தேர்தலில் சந்தித்த தோல்வி பற்றி விஜயகாந்த் எதுவும் கருத்து கூறவே இல்லை. செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை. எந்த பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
 
இந்நிலையில், காரைக்குடியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் அவர் இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது “சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு காரைக்குடியை ஏன் கொடுக்கவில்லை என நினைக்காதீர்கள். கண்டிப்பாக கொடுப்பேன். நான் பயந்து விட்டதாக பத்திரிக்கைகள் எண்ணுகின்றன. நான் பயப்படவில்லை. நீங்களும் பயப்படக்கூடாது. பீனிக்ஸ் பறவை நெருப்பில் எரிந்து சாம்பலாகி திரும்ப உயிர்த்தெழுந்து பறக்கும். நானும், நீங்களும் அப்படித்தான்” என்று பேசினார்.
 
தோல்வியில் சோர்வடைந்திருந்த தொண்டர்களுக்கு விஜயகந்தின் பேச்சு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
 

Courtesy : News7


இதில் மேலும் படிக்கவும் :