வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : புதன், 14 டிசம்பர் 2016 (18:29 IST)

பரிதாப நிலையில் விஜயபாஸ்கர் – வெளிச்சத்திற்கு வராத உண்மை

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., கரூர் மாவட்ட செயலாளராகவும், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ வாகவும் இருந்து வந்த நிலையில், அப்போது செந்தில் பாலாஜி தனக்கு துரோகம் செய்ததாகவும், தன்னை ஜெயிக்க விடாமல் செய்ததாக அ.தி.மு.க வினரிடையே பெரும் புயல் உருவான நிலையில், 441 வாக்குகள் வித்யாசத்தில் ஜெயித்த கரூர் எம்.எல்.ஏ விற்கு அடித்தது யோகம்.


 

 
தம்பித்துரையின் செல்லப்பிள்ளையாக அரசியலில் களமிறங்கிய., எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது. இது தமிழக மக்கள் எல்லோரும் அறிந்ததே ! ஆனால் வெளிச்சத்திற்கு வராத பல உண்மை தகவல்கள் இந்த காவிரி ஆற்றுப்பாதுகாப்பு குழுவினால் கிணறு தோண்ட பூதம் கிளம்பியவாறு தற்போது கிளம்பியுள்ளது.
 
தமிழக அரசியலில் சிறுவயது அரசியல்வாதி செந்தில் பாலாஜி, மூத்த நிர்வாகிகளின் புகாரினால் பதவி பறிபோனது. மேலும் கடந்த வருடம் தம்பித்துரை ஆதரவாளரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான், என்று அப்போது முதல் இப்போது வரை பேசப்பட்டு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தற்போதைய முதல்வர் ஒ.பி.எஸ் ம் ஆதரவாம், ஏனென்றால் மாவட்ட செயலாளர் பதவியை செந்தில் பாலாஜியிடமிருந்து பறிக்கப்பட்ட உடனே, கடந்த ஆண்டு தமிழக அளவில் ஐந்து அமைச்சர்களை கொண்டு செயல்வீரர்கள் கூட்டத்தை போட்டதே கரூர் பிரேம் மஹாலில் தான், அந்த பிரேம் மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க வினர் தானாம், 
 
மேலும் அப்போது முதல் தம்பித்துரையினால் ஒதுக்கப்பட்ட செந்தில் பாலாஜி என்ன காரணத்திற்காக பதவியை பறித்தார்கள் என்ற நிலையில், அந்த பிரமாண்டமான செயல்வீரர்கள் கூட்டத்தின் பின்பும், தம்பித்துரையும், ஒ.பி.எஸ் ம் எடுத்த முடிவின் படி தான் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மாவட்ட செயலாளராக ஆக்கினார்கள். 
 
இந்நிலையில் அப்போதே மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் சுமார் 6 மாதங்கள் மட்டுமே அப்பதவியில் நீடித்தார். பின்பு மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. கட்சி பதவி ஏன் கொடுக்கப்பட்டது, ஏன் பறிக்கப்பட்டது என்ற கோணத்தில் யோசிப்பதற்குள்ளேயே சட்டப்பேரவை தேர்தல் வந்தது. 
 
இந்நிலையில் தான் தி.மு.க வும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்து தி.மு.க கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உடன் பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நன்னியூர் ராஜேந்திரனின் பதவி நீடிக்க வேண்டுமென்றால் எதிர்த்து உள்ள அ.தி.மு.க வை முடக்குவது என்று தி.மு.க மேலிடம் தன்னுடைய ராஜ தந்திரத்தை பயன்படுத்தியது ! அப்போது தி.மு.க வின் தூண்டில் முள்ளுக்கு இரையானவர் தான் செந்தில் பாலாஜி.
 
கரூர் தொகுதியை தன் கட்சிக்கு கொடுத்தால் எப்படியும், தோற்று விடுவார்கள் என்று கருதி, காங்கிரஸ் கட்சிக்கு தள்ளி விட்டதோடு, அரவக்குறிச்சி தொகுதி மற்றும் குளித்தலை தொகுதி தான் தி.மு.க விற்கு, அதாவது ஜெயிப்பதற்கு தோராயமாக இருக்கும் என்று கருதி, அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரையும், தி.மு.க வும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டது. அதன் மூலமாக அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே குளித்தலை தொகுதியை சரியான அ.தி.மு.க வேட்பாளருக்கு கொடுக்காமல் தோற்கடிக்க வைத்தது. 
 
இந்நிலையில், தி.மு.க வின் கோடீஸ்வர வேட்பாளர் கே.சி.பி தன்னுடைய கூட்டணி கட்சி என்பதால் ஜெயிப்பதற்கு பல கோடி ரூபாய்களை அள்ளித்தந்தார். மேலும் அவர் திட்டமிட்டபடியே அப்பணத்தை செந்தில் பாலாஜி தான் கொடுத்ததாக கூறி அப்போதே பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க வினர், அவர்கள் எதிர்பார்த்த படியே அ.தி.மு.க வேட்பாளர் 441 வாக்குகள் வித்யாசத்தில் தான் ஜெயித்தார். இது பழைய கதை மக்களுக்கு தெரிந்தும், தெரியாத விஷயங்கள் இதில் பெரிதளவும் அடங்கியுள்ளது.
 
ஆனால் 441 வாக்குகள் வித்யாசத்தில் தானே ஜெயித்தார் என்று எதிர் கட்சியான தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பேங்க்.சுப்பிரமணியன் எந்த வித வாய் திறக்காமல் ஒரு கேஸ் கூட போடாமல், தம்பித்துரையிடமிருந்து பெட்டி பெற்றதாக தமிழக அளவில் பெரிதும் பேசப்பட்டது. மேலும் ஜெயித்த எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயபாஸ்கர் செந்தில் பாலாஜி கரூர் தொகுதி மக்களுக்கு கொண்டு வந்த ஏ.சி.பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முடக்கினார். 
 
அவர் கொண்டு வந்த திட்டத்தில் தற்போது அம்மா வாட்டர் மட்டுமே இருக்கின்றது. அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக பழிவாங்கியதோடு, தன்னை அழிக்க நினைத்ததாக கருதப்பட்ட செந்தில் பாலாஜியை அடுத்தடுத்தாக பழி வாங்கி வரும் நிலையில், தற்போது வரை அ.தி.மு.க மாவட்ட செயலாளர் என்ற முறையில் எந்த வித கட்சி அழைப்புகளுக்கும், செந்தில் பாலாஜியை விஜயபாஸ்கர் அழைத்ததில்லை. 
 
மேலும் கட்சி சார்பில் அடிக்கப்படும் போஸ்டர் மற்றும் பிளக்ஸ்களிலும் ஒரு எம்.எல்.ஏ என்ற முறையில் செந்தில் பாலாஜி பெயர் அடிப்பதில்லை. ஒன்லி ஒன் தம்பித்துரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆகியோர் பெயரை மட்டுமே தான் அடித்து வந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை அப்போதே தள்ளிப்போட்ட விஷயம் மக்களுக்கு நன்கு தெரியும்.
 
மீண்டும்,அம்மாவின் ஆணைகிணங்க, அனைத்து அமைச்சர்களின் முயற்சியால் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளாத நிலையில், மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் செந்தில் பாலாஜியை அழைக்காதது அ.தி.மு.க வினரிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தி வந்தது.
தற்போது நேற்று நடைபெற்ற மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தினால் பல விஷயங்கள் வெளி வரத் தொடங்கியுள்ளது. என்னவென்றால் ஆளுகின்ற அ.தி.மு.க கட்சியின் விஜயபாஸ்கருக்கு ஆதரவாகவும், ஆளுங்கட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ள சகாயம் ஆய்வு ஆதரவுக்குழு முழுக்க, முழுக்க செந்தில் பாலாஜியை சிறைபிடிக்க வேண்டுமென்றும், அவர் செல்லுமிடமெல்லாம் வாக்குகள் கேட்டு செல்லும் போது தொல்லை கொடுக்க வேண்டுமென்றும் ரகசிய உத்திரவு போடப்பட்டுள்ளதாக தெரிகின்றது. 
ஏனென்றால் செந்தில் பாலாஜியை முற்றுகையிட்டதாக அவர்கள் தரப்பிலே வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் வதந்தி பரப்ப பட்ட நிலையில், அப்போது அதே அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளரும், கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் எஸ்கேப் ஆனது ஏன் ? மேலும் மணல் கொள்ளைக்கு எதிராக பேசப்பட்ட போது ஆளுகின்ற கட்சியையும், ஆளும் கட்சி வேட்பாளரை மட்டுமே சகாயம் ஆய்வு ஆதரவுக்குழு ஒருங்கிணைப்பாளர் முகிலனை வைத்து சுமார் 14 விவசாய சங்கங்களையும் ஆர்பாட்டத்தில் ஈடுபட வைத்ததோடு, செந்தில் பாலாஜி தோற்கடிக்க அப்போதே சதி திட்டம் தீட்டியதாகவும், அந்த திட்டத்திற்கு ஆளுகின்ற ஆட்சியின் தரப்பில் அமைச்சரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை இந்த முகிலனுக்கு ஆதரவாக இருந்ததாகவும், மேலும் வன்முறை, அரசு சொத்துக்கு சேதம் விளைவிக்க முயற்சி ஏன் இவர் மீது குண்டர் சட்டமே போடும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்று அனைத்து தரப்பினரையும் கட்டிப்போட்டது, ஆளுகின்ற ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த கூடாது என்பதற்காக.
 
மேலும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சரின் கனவு பலிக்காத நிலையில், அவர் எதிர்பார்த்த மாதிரி தனது எதிரியாக இன்று வரை கருதி வரும் செந்தில் பாலாஜியை பழி சொல் போட முடியவில்லையே என்று மனமுருகி நிற்கும் நிலையில், நேற்று, காவிரி ஆற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர் தொகுதிக்குட்பட்ட அதாவது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதிக்குட்பட்ட வாங்கலில் அதே சகாயம் ஆய்வு ஆதரவுக்குழு களத்தில் குதிக்க ? மறுபடியும் முகிலனா ? என்று கலக்கத்தில் உள்ளாராம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.


 
காரணம் முகிலனுக்கு எதோ ஒரு செட்டில் மெண்ட் இன்னும் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் கொடுக்க வில்லை என்றும் அ.தி.மு.க வினரால் பேசப்பட்டு வருகின்றது. தமிழக அளவில் ஆங்காங்கே மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றது. ஆனால் எங்கேயும் களமிறங்காத முகிலன், அதுவும் சகாயம் ஆய்வு ஆதரவுக்குழு ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் களத்தில் நிற்கும் இந்த முகிலன், அவர் பெயர் வைத்திருக்கும் சகாயம் ஆய்வு குழு என்றால், பி.ஆர்.பி சொத்தை மத்திய மற்றும் மாநில அரசிற்கு திருப்பி கொடுக்க பாடுபட்டு வரும் இவரது கொள்கைகளை மதிப்பவராக இருந்தால், இதே கரூர் மாவட்டம், தோகைமலையில் தான் பி.ஆர்.பி என்றழைக்கப்படும் பி.ஆர்.பழனிச்சாமி முதன் முதலில் தன் கிரானைட் பிசினஸ் ல் இறங்கி ஒரு மலையையே காணவில்லை என்று சென்ற வருடம் மட்டுமில்லாமல் முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள் ஷோபனா, ஜெயந்தி ஆகியோர் இருக்கும் போது., அதே பகுதியில் கிராம மக்கள் மலையை காணவில்லை என்று போராட்டம் நடத்தியபோது, எங்கே சென்றார். இந்த முகிலன். 
 
மேலும் ஏற்கனவே மணல் பிரச்சினையை மட்டுமே அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை தொடர்ந்து தற்போது கரூர் தொகுதியில் மட்டும் தான் மணல் பிரச்சினை நடக்கின்றதா ? தமிழகம் முழுவதும் இதே மணல் பிரச்சினை நடக்கும் போது ஏன் கரூர் மாவட்டத்தை மட்டும் நாடுகின்றார் ? என்று பல்வேறு குழப்பங்களில் இருந்த நிலையில் இரவு முழுவதும் மணல் ரீச் ஆட்கள் தன்னையும் குழந்தைகளையும் தாக்கியதாக இரவு 10 மணிவரை மாவட்ட ஆட்சியர் கேம்ப் ஆபீஸ் முன்பு போராட்டம் நடத்தி பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு 11 மணி வரை பிரச்சினையில் ஈடுபட்ட இதே முகிலன், திடீரென்று காலையில், தாராபுரம் பகுதியில் உள்ள மூலனூரில் குடியிருப்புகளின் மத்தியில் செயல்பட்டு வரும் விக்னேஷ் என்ற ஆயில் ரீபைனரி ஆயில் மில்லில் வெளியேற்றப்படும் புகை, கழிவு நீரால் நிலத்தடி நீர் மற்றும் மாசு மற்றும் காற்று மாசுக்கள் பரவி வருவதாக அங்கு மூலனூர் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் ? என்பது புரியாத புதிராக உள்ளது. 
 
மேலும், இந்த முகிலனின் போராட்டம் எதற்கு ஒரு புறம் யோசிக்கும் நிலையில் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அதுவும் மணல் ரீச் ஆட்களால் தாக்கப்பட்டதோடு, கூறி வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் மூலம் வதந்தி பரப்பினரா ? அப்படி தாக்கப்பட்டிருந்தால் மருத்துவமனையில் தானே இருந்திருக்கு முடியும் என்றும், எப்படி விடியற்காலைக்குள் அவரது மாவட்டத்திற்கு பிரச்சினை என்றவுடன் கிளம்பினாரா ? 
 
ஒரு போராட்டம் மூலம் ஆளுகின்ற அரசியல் கட்சியினிரிடையே நடைபெறும் இந்த சம்பவத்தினால், கரூர் மாவட்ட அளவில் ஊடகத்துறையினர் மட்டுமில்லாமல், காவல்துறை மற்றும் ஆட்சித்துறையினரும் குழப்ப நிலையில் உள்ளனர். இரவு மருத்துவமனையில் அது ஒரு மாவட்டம், விடியற்காலை போராட்டம் மற்றொரு மாவட்டத்தில் எப்படி என்பது இன்னும் புரியாத புதிராகவும் உள்ளது.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்