சட்டபேரவையா? குழாயடி சண்டைக் களமா? ராமதாஸ் கேள்வி
திமுக-அதிமுக ஆகிய கட்சியினருக்கு இடையே நேற்று நடைப்பெற்ற மோதலில் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டபேரவை குழாயடி சண்டைக் களமாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நேற்று திமுக-அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் அண்மைக்காலத்தில் முதல் முறையாக நேற்று அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவை ஒத்திவைப்பு சதாரணமானது என்றாலும் அவை ஒத்திவைக்கப்பட்ட காரணங்கள் தான் வேதனை அளிக்கின்றன்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சட்டபேரவையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை திராவிட கட்சிகளின் வழிகாட்டியாக இருந்த அண்ணா உணர்த்திவிட்டு சென்றிருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மறந்துவிட்டு அதிமுக உறுப்பினர்களை கொத்தடிமைகள்; சேற்றால் அடித்த பிண்டங்கள் என கூறியதுதான் அவையை குழாயடி சண்டைக் களமாக மாற்றிவிட்டது.
ஜனநாயக நாணயத்தின் இரு பக்கங்களுக்கும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மதிப்பிடும் உரிமை தமிழக மக்களுக்கு உள்ளது என்பதால், அதைப் பயன்படுத்தும் வகையில் அவை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிப்பரப்புவதற்கு தமிழக அரசு உஅடனடி நடவைக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.