Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திர தின விழா; லட்டு வாங்க கூட ஆளில்லை : விஜயகாந்த் அப்செட்

Written By Murugan
Updated: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (13:03 IST)
தேமுதிக சார்பாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மிகவும் சொற்ப அளவில் மட்டுமே கலந்து கொண்ட விவகாரம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை அதிருப்தி அடைய வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
70வது சுதந்திர தின கொண்டாட்டம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வழக்கம் போல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பாக சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
 
பொதுவாக, இதற்கு முன் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாக்களில், தேமுதிக தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏராளமானோர்  கலந்து கொள்வது வழக்கம்.
 
ஆனால், சட்டமன்ற தேர்தலில், படுதோல்வியை தேமுதிக சந்தித்ததையடுத்து, ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சி தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதோடு, அதிமுக மற்றும் திமுக கட்சிக்கு தாவி வருகின்றனர்.
 
விழாவிற்கு வந்த விஜயகாந்த், தேசியக் கொடியை ஏற்றி, அங்கிருந்தவர்களுக்கு லட்டு வழங்கினார். ஆனால், அங்கு 50 பேருக்கும் குறைவாகவே ஆட்கள் இருந்தனர். 
 
ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த விஜயகாந்த், இதுகண்டு, மிகவும் அப்செட் ஆகிவிட்டார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

எல்லாம் காட்டு

ஆட்சியை கவிழ்க்க திட்டம் போடுகிறாரா டிடிவி தினகரன்?!.. நடப்பது என்ன?...

ஜெயலலிதா கூட இப்படி திமுகவை கடுமையாக விமர்சித்ததில்லை: அரசியல் விமர்சகர்கள்...

விஜய் தொடர்ந்து இதே வேகத்தில் அரசியல் தாக்குதல்களை முன்னெடுத்தால்.. திமுக அவ்வளவு தான்...

சர்க்காரியா கமிஷன்.. நேருக்கு நேர் முதல்வர் விஜய் விவாதிக்க தயாரா? ஆர்.எஸ்.பாரதி

கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் கட்டுப்பாடு தளர்வு!.. மத்திய அரசு உத்தரவு..

அடுத்த கட்டுரையில்
Show comments