1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: புதன், 25 அக்டோபர் 2017 (11:49 IST)

நவம்பர் 7-ல் மூன்று திருப்பங்கள்: தமிழக அரசியலில் பரபரப்பு

கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் அவ்வப்போது திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தமிழக அரசுக்கு முக்கிய நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக கருதப்படுகிறது.

\
 


திமுகவின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் என்று கூறப்படும் 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு அன்றுதான் வரவுள்ளது. இந்த தீர்ப்பின் பாதக, சாதக அம்சங்களை பொறுத்தே திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்

மேலும் அதே நவம்பர் 7ஆம் தேதி தான் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 'எழுச்சிப்பயணம்' என்ற சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். நமக்கு நாமே' போல் இந்த எழுச்சிப்பயணமும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே அரசியல், அதிரடி கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் அதே நவம்பர் 7ஆம் தேதிதான். தனது பிறந்த நாளில் அவர் தனது புதிய கட்சி, சின்னம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒரே நாளில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நவம்பர் 7 முக்கிய நாளாக கருதப்படுகிறது.