ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் ஏன் எதிர்க்க வேண்டும்: திருமாவளவன்

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (05:27 IST)
தமிழக அரசியலில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருமே ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ அரசியலில் ஈடுபட்டால் நிச்சயம் திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது



 
 
இந்த நிலையில் திராவிட கட்சிகளால் ஒதுக்கப்பட்ட சிறுசிறு கட்சிகள் ரஜினி, கமல் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதில் கூட்டணி சேர்ந்து தங்களை காப்பாற்றி கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'அரசியலுக்கு வரவேண்டும் என்றால் அவர்கள் அறப்பணிகள் செய்திருக்க வேண்டும், போராட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும், சிறைக்குச் சென்றிருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் கிடையாது. இவையெல்லாம் இல்லாமலேயே அரசியலுக்கு வரலாம். ஒருவர் அரசியலில் ஈடுபட கூடாது என்று சொல்வது ஜனநாயக மரபு அல்ல. அந்த வகையில்தான் நான் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை ஆதரித்தேன்' என்று கூறினார்.

எல்லாம் காட்டு

AI அறிவு இருந்தால் மட்டுமே வேலை.. ரூல்ஸை மாத்திய HCLTech.. லட்சக்கணக்கில் சம்பளம்...

நம்ம பிரதமர் மோடி இருக்கிறார்.. தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஆர்பி உதயகுமார்

சுமார் 4.6 லட்சம் தங்க மோதிரம் வாங்க டெண்டர்.. தாய்மாமன் தங்க மோதிர திட்டம்...

பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்து முறைகேடு.. சார்பதிவாளர் சஸ்பெண்ட்..

ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி.. கடும் அதிருப்தியில் மத்திய அரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments