Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை நீக்குவது எப்படி? அதை ஓ.பி.எஸ்-தான் கூற வேண்டும் : தம்பிதுரை கல கல

Written By Murugan
Updated: சனி, 13 மே 2017 (09:18 IST)
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க என்ன வழி இருக்கிறது என்பது ஓ.பி.எஸ் தான் கூற வேண்டும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் அணி களம் இறங்கிய பின், அதிமுகவில் இரு அணிகள் ஏற்பட்டது. இதில், சசிகலாவும், தினகரனும் தற்போது சிறையில் இருக்கிறார்கள்.  
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணையும் சூழல் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரணை, சசிகலா குடும்பத்தினைரை கட்சியிலிருந்து நீக்குதல் என ஓ.பி.எஸ் அணி கறார் காட்ட, இதுவெல்லாம் முடியாது என எடப்பாடி அணி கை விரித்து விட்டது. எனவே, இரு அணியும் இணைவது சாத்தியமில்லாத சூழலாகவே பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை “பொதுக்குழு கூடி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலா. எனவே, தனிப்பட்ட முறையில் யாரும் அவரை நீக்க முடியாது. இதுபற்றி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும். சசிகலாவை நீக்க என்ன வழி இருக்கிறது என்பது ஓ.பி.எஸ் கூறட்டும்” எனக் கூறினார்.

எல்லாம் காட்டு

மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கமா? முதல்வரின் முடிவு என்ன?

சட்டப்பேரவையில் இன்று விவாதம் கிடையாது: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு..

சட்டசபையில் இன்று முதல்வர் விஜய்யின் பதிலுரை.. திமுகவினர் ஓடுவார்களா? சமாளிப்பார்களா?

விஜயின் வளர்ச்சி!.. அறிவாலாய கதவை தட்டுமா காங்கிரஸ்?!.. நடப்பது என்ன?..

Xiaomi 18 Fold ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஆப்பிள் Fold போனுக்கு 2 நாட்கள் முன்பு வருவதால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments