பன்னீர்செல்வத்தின் நிலை தான் உமக்கும்: அதிரடியில் தினகரன்; கவலையில் முதல்வர் எடப்பாடி!!
சசிகலா தலைமையிலான புதிய ஆட்சிமன்ற குழுவை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்த குழுவில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இடம்பெறாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்த போது ஆட்சிமன்ற குழுவில் ஜெயலலிதா தலைவராகவும், குழு உறுப்பினர்களாக மசூதுதனன், ஓ.பன்னீர்செல்வம், வேணுகோபால், ஜஸ்டின்ராஜ், தமிழ்மகன் உசேன் ஆகிய 5 பேர் இருந்தனர்.
இதை மாற்றி தற்போது, சசிகலா குழு தலைவராகவும், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன், அ.தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, பி.வேணுகோபால், ஏ.ஜஸ்டின்ராஜ் ஆகியோர் உருப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இதில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
ஆளும் கட்சியில் மிக முக்கிய பதவி மற்றும் முதல்வராக இருக்கும் பழனிச்சாமியின் பெயர் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல கட்டளைகளை போட்டுள்ளார். அவற்றை எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தாத காரணத்தினாலே ஆட்சிமன்ற குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன் புறக்கணித்துள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே நிலை நீடித்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர் செல்வத்தின் நிலை வந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.