1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வியாழன், 16 மார்ச் 2017 (14:10 IST)

ஆர்.கே.நகரில் தினகரன்...செம கடுப்பில் சசிகலா - பின்னணி என்ன?

ஆர்.கே.நகர் தொகுதியில், டிடிவி தினகரன், தன்னை அதிமுக வேட்பாளராக அறிவித்துக் கொண்டதில், பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு விருப்பம் இல்லை என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.


 
 
நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இது, ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவு என அவர் செய்தியாளர் பத்திரிக்கையில் கூறினாலும், அவரின் சுய விருப்பம் படிதான் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் எனவும், முதலில் எம்.ல்.ஏ பதவி பெற்று, அதன்பின் முதல்வர் பதவியில் அவர் அமர்வார் என அதிமுக வட்டாரங்கள் கூறிவருகின்றன.
 
இதில் திடீர் திருப்பமாக, இந்த விவகாரத்தில், தினகரன் மீது சசிகலா கடும் அதிருப்தி அடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவை ஆர்.கே.நகரில் வேட்பாளராக்கி இருந்தால் எம்ஜிஆரின் மகளை எதிர்க்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்யவும் தன் மீதான எதிர்ப்பு வாக்குகளை சிதறாமலும் செய்திருக்கலாம் என சசிகலா கருதுகிறாராம். அவரை சமீபத்தில் சந்திக்க வந்தவர்களிடம் இதை தான் வலியுறுத்தியுள்ளார்.
 
ஆனால் தினகரன் அவரின் பேச்சை கேட்காமல் பதவி ஆசைக்காகவும், ஜோதிடர் ஒருவர் சொன்னார் என்பதற்காகவும் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டுள்ளார் எனவும், இதனால், அவர் மீது சசிகலா கடுமையான கோபத்தில் உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
ஏற்கனவே, கட்சியிலிருந்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் கணவர் நடராஜன் ஆகியோரை தினகரன் விலக்கியே வைத்துள்ளார் என திவாகரனின் மகன் பெங்களூர் சென்று சசிகலாவிடம் முறையிட்டதாக செய்திகள் வெளியானது. குடும்ப பிரச்சனையில் ஏற்கனவே வருத்தம் அடைந்துள்ள சசிகலா, தற்போது ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் விவகாரத்திலும் தன்னை மீறி தினகரன் செயல்படுவதால் மிகுந்த மன நெருக்கடிக்கு ஆளாகியுள்ளாராம்.