செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 12 மே 2017 (23:14 IST)

கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு! ஜனாதிபதியின் முடிவுக்கு காரணம் என்ன?

திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் வரும் ஜூன் 3ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கருணாநிதியை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



 


தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 23ஆம் தேதி சென்னை வரும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்த பின்னர் டெல்லி செல்லும் முன், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில் அவர் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக கருணாநிதியை சந்திக்கவுள்ளது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் தினமும் பல்வேறு அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில் கருணாநிதியின் வைர விழா கொண்டாட்டம், பிரணாப் - கருணாநிதி சந்திப்பு ஆகியவை பெரும் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.