Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசிற்கு எதிராக ஓட்டு ; ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகுமா?

Written By Murugan
Updated: திங்கள், 20 பிப்ரவரி 2017 (13:57 IST)
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உட்பட 11 அதிமுக எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்கும் ஆலோசனையில் கார்டன் தரப்பு ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
சசிகலா தரப்பில் முன்னிறுத்திய எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்டசபையில் கடந்த 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என அதிமுக கட்சி கொறடா ராஜேந்திரன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி 122 எம்.எல்.ஏக்களி எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர். 
 
அதேபோல், ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள், எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர். கொறடாவின் உத்தரவிற்கு மீறி செயல்பட்டதால்  அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபால் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியானது.
 
ஆனால், ஓ.பி.எஸ் அணி சார்பாக கொறடாவாக நியமிக்கப்பட்ட செம்மலை, எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்குமாறு அதிமுக எம்.எல்.எக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனவே, இதன் மூலம் அவர்களின் பதவி தப்பலாம் எனத் தெரிகிறது. 
 
மேலும், மக்களின் ஆதரவு ஓ.பி.எஸ் அணிக்கு இருக்கும் இந்த சூழ்நிலையில், அவர்களின் எம்.எல்.ஏ பதவிகளை பறித்து, இடைத் தேர்தலை சந்திப்பது சரியாக இருக்காது என எடப்பாடி தரப்பிடம் இருந்து கார்டனுக்கு தகவல் கூறப்பட்டதாகவும், அதை கார்டன் தரப்பு ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

முதல்வர் விஜய்யின் சுதந்திர தின உரையில் விடுபட்ட ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. அமைச்சர் கீர்த்தனா அதிருப்தியா?

2029 தேர்தலில் மோடிக்கு சிம்மசொப்பனமாக இருக்க போவது ராகுல் காந்தி அல்ல, விஜய் தான்.. அரசியல் விமர்சகர்கள்...

விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தேசிய அளவில் நாளிதழ்களில் முழு பக்கம் விளம்பரம்.. என்னவோ திட்டம் இருக்கு.

சென்னைக்கு வரும் கர்நாடக முதல்வர்!. விஜயுடன் சந்திப்பு நடக்குமா?..

ப சிதம்பரம் ஒரு உண்மையான நக்சல்.. அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்ச்சை பேச்சு...!

அடுத்த கட்டுரையில்
Show comments