ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (00:20 IST)

காலியாகிறது தினகரன் கூடாரம்: மேலும் ஒரு விக்கெட் இழப்பு

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது தினகரன் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த வழக்கு முடிய எத்தனை மாதம் ஆகுமோ தெரியாது, அப்படியே தினகரன் அணிக்கு சாதகமாக வழக்கு முடிந்தாலும் எடப்பாடி அணியினர் அப்பீலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மீண்டும் எப்போது எம்.எல்.ஏ ஆவார்கள் என்பது சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



 
 
எனவே இப்போதைக்கு ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தினகரன் அணியின் கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
முதல்கட்டமாக நெல்லை மாவட்டம், தென்காசி தொகுதி (தனி) எம்.பி- யான வசந்தி முருகேசன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. வசந்தியை அடுத்து இன்னும் 6 எம்பிக்களும் எடப்பாடி அணிக்கு எப்போது வேண்டுமானாலும் தாவுவதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.