வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:23 IST)

முதல்வராக சசிகலா முறியடிக்க வேண்டிய சட்ட சிக்கல்கள்: இல்லையெனில் ஓ.பி.எஸ் தான்!!

சசிகலா முதல்வராக வேண்டும் என்றால் சில முக்கிய சட்ட சிக்கல்களைத் தாண்டியாக வேண்டும். அப்போது தான் அவரது முதல்வர் கனவு நனவாகும். 


 
 
சசிகலா முதல்வராவதற்கான பெரிய தடை சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு. அடுத்த வாரத் தொடக்கத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், சசிகலா இதில் ஜெயித்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளார்.
 
இந்த சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டால் சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டி வரும். அதை விட முக்கியமானது தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டு மற்றும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
 
அடுத்தாக சசிகலா சட்டசபை அதிமுக கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதிலும் சிக்கல்கள் உள்ளது. சட்டசபையில் உறுப்பினராக இல்லாதவர் எப்படி சட்டசபை கட்சித் தலைவராக முடியும் என்று சட்ட நிபுணர்கள் கேட்கும் கேள்விக்கு அதிமுகவும் சசிகலாவும் பதிலற்று உள்ளனர்.
 
இறுதியாக அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ததிலும் சட்ட விதி மீறல் உள்ளது. இதைனை தேர்தல் ஆணையம் முறையற்றது என்று கூறி விட்டது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 
 
ஆக இவை அனைத்தையும் சசிகலா வெற்றி பெற்று வந்தால் முதல்வர் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அரசியல் மற்றும் சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.