கமல்-கவர்னர் சந்திப்பா? அதிர்ச்சியில் தமிழக அரசு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் அவர்களால் ஏற்பட்ட சலசலப்பில் நிச்சயம் அரசு கவிழும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி, மக்கள் செல்வாக்கு பெற்ற ஓபிஎஸ் இருந்தும் ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் செய்யாத வேலையை கமல் எளிதில் செய்துவிடுவார் போல தெரிகிறது. ஊழல் புகார்களை ரசிகர்களையும் பொதுமகக்ளையும் அனுப்ப சொன்ன கமலுக்கு திடீரென ஒரு ஐடியா தோன்றியுள்ளதாம்
பேசால் அனைத்து புகார்களையும் ராஜ்கமல் அலுவலகத்திற்கு அனுப்ப சொல்லி, அத்தனை புகார்களையும் எடுத்து கொண்டு கவர்னரை நேரில் சந்தித்து இந்த புகார்களை ஒப்படைப்பதுதான் அந்த ஐடியாவாம். கமல்-கவர்னர் சந்திப்பு மட்டும் நடந்தால் ஆட்சி கவிழ்வது உறுதி என்று கூறப்படுவதால் தமிழக ஆளும் அரசியல்வாதிகள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.