சசிகலா முதல்வராவதில் சிக்கல்: டிமிக்கி கொடுக்கும் ஆளுனர்!!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவதாக இருந்தர். ஆனால், ஆளுநர் சென்னை வருவது ரத்தாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால் மன்னார்குடி கோஷ்டியின் கடும் நெருக்கடியால் அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது. இதை ஓ.பன்னீர்செல்வமே பகிரங்கமாக தெரிவித்தார்.
இதனால் சசிகலா முதல்வர் பதவிக்கு அமரும் பேராசையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இன்று சென்னை திரும்பவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், சென்னைக்கு வித்யாசகர் ராவ் வரும்போது ஓ.பன்னீர்செல்வம் தம்முடைய ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் சில நாட்களில் தீர்பு வர உள்ள நிலையில் ஆளுனர் வருகை தாமதம், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த தீடீர் மாற்றம் அனைத்தும் சசிகலாவின் முதல்வர் பதவி கனவுக்கு பெரும் இடியாக விழுந்துள்ளது.