செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (03:32 IST)

சசிகலா குடும்பம் இல்லாத அதிமுக! ஜெயலலிதாவால் முடியாததை செய்து காட்டிய ஓபிஎஸ்

அதிமுகவை சசிகலாவின் பிடியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் மனதில் எழுந்த எண்ணமாக இருந்த நிலையில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாத அதிமுகவை ஜெயலலிதாவால் கூட அமைக்க முடியவில்லை.



 


ஜெயலலிதாவுக்கு நிகராக இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதாவை விட அதிகாரம் மிக்கவராக சசிகலா வலம் வந்தார். ஆனால் ஜெயலலிதாவால் முடியாத இந்த பெரும் பணியை ஓபிஎஸ் அவர்களின் பொறுமையான நடவடிக்கை சாதித்து காட்டியுள்ளது.

முதலில் ஜெ. சமாதி முன் தியானம் செய்து சசிகலாவை முதல்வர் ஆகவிடாமல் செய்த ஓபிஎஸ், பின்னர் தனி அணியாக பிரிந்து அதிமுகவை இரண்டாக உடைத்தார். பின்னர் சசிகலா சென்ற பின்னர் தினகரன் கட்டுப்பாட்டில் அதிமுக வந்தவுடன் மாஃபா பாண்டியராஜன் துணையுடன் தினகரனை அடியோடு ஒழித்து கட்ட அனைத்து ஏற்பாடுகளையும் ஆற அமர செய்தார். இதற்கு பாஜக மேலிடமும் கைகொடுக்க தற்போது தினகரனையும் அமைச்சர்களே வெறுத்து ஒதுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. சசிகலா குடும்பம் இல்லாத அதிமுக என்ற ஒவ்வொரு தொண்டனின் கனவு நிறைவேறிவிட்டதால் ஒபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.