திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 7 ஜனவரி 2017 (10:56 IST)

50 வயதை தொடும் சாமிநாதன் திமுக இளைஞர் அணி செயலாளர்

மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து அவர் வகித்து வந்த திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி, இளைஞர் அணி இணை செயலாளராக இருந்த மு.பெ.சாமிநாதனுக்கு சென்றுள்ளது.


 

 
மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் 35 வருடமாக வகித்து வந்த திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி அழகரி ஆகிய இருவரில் ஒருவருக்கு இந்த பதவி செல்லலாம் என்று செய்திகள் பரவியது.
 
இந்நிலையில் திமுக இளைஞர் அணி இணை செயலாளராக இருந்த மு.பெ.சாமிநாதனை திமுகவின் இளைஞர் அணி செயலாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது. மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். திமுகவின் வாக்கு  பலவீனமாக உள்ள கொங்கு மண்டலத்தை சேர்ந்த சாமிநாதனுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டு இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.