திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2017 (14:22 IST)

வீணாப்போன தினகரனைப் பார்த்து ஜெ. கை அசைத்தாராம்: கே.பி.முனுசாமி

அதிமுகவில் இருந்து 2007ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட தினகரனைப் பார்த்து ஜெயலலிதா அப்போலோவில் கையசைத்ததாக் பொய் சொல்கிறார் என கே.பி.முனிசாமி கூறியுள்ளார்.


 

 
ஓபிஎஸ் அணியினர் இன்று ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பெயரை வெளியிட்டனர். குழுத் தலைவராக மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி கூயதாவது:-
 
அதிமுகவில் இருந்து 2007ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட தினகரன், ஜெயலலிதா இறந்த பிறகுதான் அப்பல்லோ மருத்துவமனைக்கே வந்தார். அப்படி இருக்கும் போது, மருத்துவமனைவில் அவரைப் பார்த்து ஜெயலலிதா கையசைத்தார் என்று தினகரன் பொய் செல்கிறார் என கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.