Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (08:00 IST)
தீபாவின் இன்றைய நிகழ்ச்சிகள்: புதுக்கட்சி பெயரை அறிவிக்கின்றார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று புதிய கட்சியை அறிவிக்கவுள்ள நிலையில் அவருடைய இன்றைய நிகழ்ச்சிகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்
இன்று காலை திநகர் சிவஞானம் சாலையில் பேரவை அலுவலகத்தை தீபா திறந்து வைக்கின்றார். பின்னர் 6.30 மணிக்கு மதுரவாயில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை சிற்றுண்டு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் மதியம் 12 மணிக்கு திநகர் சிவஞானம் சாலையில் 5000 பேர்களுக்கு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்றார்.
இதன்பின்னர் மாலை 5 மணிக்கு கட்சியின் பெயரையும், 5.30 மணிக்கு கட்சியின் கொடியையும் அறிவிக்கவுளார்.
பின்னர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை செய்தியாளர்களுக்கு அறிவித்து அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கின்றார்.