1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (14:03 IST)

அதிமுகவினர் சட்டைப் பாக்கெட்டில் இடம் பிடித்த சசிகலா

அதிமுகவினர் தங்களது சட்டைப் பாக்கெட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் புகைப்படத்தை வைக்கத் தொடங்கியுள்ளனர்.


 

 
பொதுவாக அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் தலைவர் புகைப்படத்தை அவர்களின் சட்டைப் பாக்கெட்டில் வைப்பது வழக்காமான ஒன்று. அதுவும் அவர்கள் வெள்ளை சட்டை அணிவார்கள் என்பதால் அந்த புகைப்படங்கள் பளிச்சென வெளியே தெரியும். 
 
திமுக என்றால் கருணாநிதி மற்றும் ஸ்டாலின். அதிமுக என்றால் ஜெயலலிதா. இது வழக்கமான ஒன்றுதான். தற்போது ஜெ. மறைந்துவிட்டதால் அதிமுக தனது அடுத்த தலைமை நோக்கி பயணிக்கிறது. ஜெ.வின் நீண்ட வருட தோழி சசிகலா அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சியை வழி நடத்த வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் வரை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இதன் விளைவாக,  அதிமுகவினர் தங்கள் சட்டைப் பாக்கெட்டில் சசிகலாவின் படங்களை வைக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது அவர்கள் சட்டைப் பாக்கெட்டில் இரண்டு படங்கள் இருக்கிறது. முதலில் ஜெ.வின் படமும், அதன் பின்னால் சசிகலாவின் படமும் இடம் பெற்றுள்ளது. 
 
காலம் செல்ல செல்ல சசிகலா படம் முதலில் இடம் பெற வாய்ப்பிருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.