1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (05:30 IST)

எம்.எல்.ஏ பதவிகூட வேண்டாம், கட்சியிலாவது சேர்த்துக்கொள்ளுங்கள்: கெஞ்சும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேர்களில் ஒருசிலர் தவிர மற்றவர்களுக்கு பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் எந்த நேரமும் தினகரன் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு செல்ல தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 
 
எம்.எல்.ஏ பதவி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, கட்சியிலாவது எங்களுக்கு அங்கீகாரம் கொடுங்கள் என்று ஏழு எம்.எல்.ஏக்கள் தூதுவிட்டிருப்பதாகவும், இதற்கு முதல்வரிடம் இருந்து பாசிட்டிவ் பதில் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
எனவே தினகரன் கூடாரம் காலியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தினகரன் வெறும் வாய்ச்சவடால் மட்டுமே அவருக்கு அரசியல் செய்யும் அளவுக்கு திறன் இல்லை என்று நேரடியாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புலம்ப தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.