வியாழன், 20 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 19 மார்ச் 2025 (17:51 IST)

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

Girl Rape
ஆந்திர மாநிலத்தில் 14 வயது சிறுமியை கடத்திய ஏழு சிறுவர்கள் ஒரு அறையில் நான்கு நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த ஒன்பதாம் தேதி ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி உறவினர் வீட்டிற்கு வந்தார். அப்போது 13ஆம் தேதி உறவினருக்கும் சிறுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அடுத்து சிறுமி கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டில் இருந்து வெளியேறி தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் 
அப்போது 15 வயது சிறுவன், சிறுமியுடன் பேச்சு கொடுத்து என்னுடைய பைக்கில் வந்தால் வீட்டில் பத்திரமாக விடுகிறேன் என்று தெரிவித்தார். இதனை இதனை நம்பிய சிறுமி அந்த சிறுவனுடன் பைக்கில் சென்ற நிலையில் அந்த சிறுவன் சிறுமியை கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தான்.
 
அதுமட்டுமின்றி அவன் தனது நண்பர்களையும் போன் போட்டு வரவழைத்து சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். நான்கு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அதன் பின் அந்த அவரை ஒரு சாலையில் விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். அந்த சிறுமியை ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் ஏழு சிறுவர்களையும் ஒரு சில மணி நேரத்தில் கைது செய்தனர்
 
Edited by Siva