வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (14:09 IST)

ஆஹா!! செவ்வாயில் ஆயுதம் ஏந்திய ஏலியன்ஸ்: பயந்து அலறிய நாசா

உலகில் உள்ள  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு என்றுமே ஒரு தனி மரியாதை உண்டு. அவர்கள் அறிவிக்கிற தகவல் எல்லாம் அத்தகைய வகையைச் சார்ந்தவை.
இந்நிலையில் நாசா விண்வெளியால் செவ்வாய் கிரகத்தை ஆராய  அனுபப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் அனுப்பியுள்ள புகைப்படங்களில்  ஒரு ஏலியன்ஸ் வீரர் இருப்பது போலவும் அவரது கையில் ஆயுதமொன்றை தாங்கியுள்ளது போலவும்  தெரிகிறது. 
 
இதனை பார்த்த நாசா விஞ்ஞானிகள் ஏலியன்கள் அங்கு இருந்து இதை கண்காணிக்கிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது.
 
இப்படத்தை பார்த்த பலரும் இது போர் வீரனைப் போல காட்சி அளிப்பதாக கூறினார்கள். அதாவது ரோமானிய புராணக் கதைகளின் படி செவ்வாய் போர் கடவுள், அதனால்தான் சூரிய குடும்பத்தின் 4 வது  கோளுக்கு செவ்வாய் என்று பெயரிட்டனர்.
 
ஆனால் வேறு சிலர் இந்த வீடியோவை உற்று நோக்கி இது செயற்கையானதாக தோன்றுவதாகவும், செவ்வாயில் எதேனும் பாறை, கற்கள் இருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன. மேலும் சிலர் இது செவ்வாய் கிரகத்தில் உள்ள சாம்பல் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தை ஏலியன் தான் என்று அடித்து சொல்வோர்களும் உண்டு
 
இப்படி பல்வேறு  கருத்து மோதல்கள் இருந்தாலும்கூட இந்த அயுதம் தாங்கிய ஏலியன்ஸ் குறித்து நாஸா தன் இறுதியான  விளக்கத்தை இன்னும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.