நாளை 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை! – ஐ.நா அறிவிப்பு!
உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை உலகத்தின் மொத்த மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2012ல் உலக மக்கள் தொகை 700 கோடியாக உயர்ந்தது. அப்போது உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் இருந்தன.
700 கோடியை தொட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நாளை உலக மக்கள் தொகை 800 கோடியை தொட உள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது. 2050ம் ஆண்டில் கணக்கிட்டால் உலக மக்கள் தொகையில் அதிகமானோர் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, பிலிப்பைன்ஸ், நைஜீரியா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில்தான் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit By Prasanth.K